×

நாங்குநேரி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மக்களின் தேவையறிந்து தமிழக முதல்வர் திட்டங்களை தருகிறார் ரெட்டியார்பட்டியில் நடிகை விந்தியா பேச்சு

நெல்லை, மார்ச் 19:  தமிழக மக்களின் தேவைகளை அறிந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டங்களை தருகிறார் என ரெட்டியார்பட்டியில் அதிமுக கொள்கை பரப்பு மாநில துணை செயலாளர் விந்தியா பேசினார். நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜாவை ஆதரித்து, மாநில கொள்கை பரப்பு செயலாளர் விந்தியா நேற்று ரெட்டியார்பட்டி, மூலைக்கரைப்பட்டியில் பேசினார். ரெட்டியார்பட்டி சந்திப்பில் விந்தியா பேசுகையில், ‘‘ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து இடங்களிலும் வெற்றி நடை போடும் தமிழகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் நன்கு வழிநடத்துகின்றனர். சாதி, மதம் பார்க்காமல் அனைத்து தரப்புக்கும் தேவையான உதவிகளை நாங்குநேரி தொகுதி வேட்பாளர் தச்சை கணேசராஜா செய்து வருகிறார். அவரை வெற்றி பெற வைப்பது உங்கள் கடமையாகும். தமிழக மக்களின் தேவைகளை அறிந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டங்களை தருகிறார். அதிமுக அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் வாக்காளர்களை மிகவும் கவரும். கொரோனா காலத்தில் கூட மக்களுக்கு இலவச அரிசி, பருப்பு, எண்ணெய், ரூ.1000 வழங்கியது இந்த அரசு. மக்களுக்கு தொடர்ந்து நல்லது நடக்க, வரும் தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்.’’ என்றார்.

பிரசாரத்தில் மாவட்ட துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன், மேலப்பாளையம் பகுதி செயலாளர் சண்முக குமார், ஒன்றிய செயலாளர்கள் பாளை முத்துக்குட்டி பாண்டியன், களக்காடு பூவரசன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் மகபூப்ஜான், ஆவின் சுரேஷ், வாஸ்து தளவாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முன்னதாக பாளை, மேலப்பாளையம் பகுதியில் பாளை தொகுதி அதிமுக  வேட்பாளர் ஜெரால்டை ஆதரித்து  நடிகை விந்தியா பேசினார். இதில்முன்னாள் எம்பிக்கள் முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், கொள்கை பரப்பு மாநில துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்எல்ஏ ஆர்.பி.ஆதித்தன், பகுதி செயலாளர்கள் வக்கீல் ஜெனி, திருத்து சின்னத்துரை, சிந்துமுருகன், அக்ரோ சேர்மன் சுப்ரீத் சுப்பிரமணியன், முன்னாள் மேயர் புவனேஸ்வரி, இளைஞரணி வை சின்னத்துரை, அரசு வக்கீல் துரை முத்துராஜ், தச்சை பகுதி இளைஞரணி செயலாளர் சுஜின்ராஜா, நிர்வாகிகள் அசன் ஜாபர் அலி, அப்ரீன் பீர்முகம்மது, டால் சரவணன், வி.பி.பாண்டி, பூக்கடை சப்பாணிமுத்து, கேடிசி சின்னபாண்டி, விவேகானந்தபாண்டியன், தமிழ்செல்வி, விசி வேல்பாண்டியன், பகவதி முருகன், சாந்திநகர் முத்துகிருஷ்ணன், தருவை காமராஜ், கோதண்டராமன், தமமுக கண்மணி மாவீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Vindhya ,Tamil Nadu ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக...