×

குன்னூரில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

ஊட்டி, மார்ச் 19:இளம் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி குன்னூரில் நடந்தது. குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிராவிடன்ஸ் பெண்கள் கல்லூரியில் இளம் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும் கையெழுத்து இயக்கம் நடந்தது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்து பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து, வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவிகளுடன் கலெக்டர் செல்பி எடுத்து கொண்டார். ெதாடர்ந்து அவர் கூறுகையில்,`நீலகிரி மாவட்டத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து 3 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களிடையே தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இளம் வாக்காளர்களாகிய நீங்கள், தினமும் அனைத்து நாட்டு நடப்புகளையும் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 6ம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவித்துள்ளது.  இந்நாளில் பணிக்கு செல்லும் அனைவருக்கும் ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படுகிறது. தங்களுக்கு ஒருநாள் விடுப்பு கிடைத்து விட்டது என எண்ணாமல் கண்டிப்பாக வாக்காளர்கள் வாக்குசாவடிகளுக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். மேலும், இளம் வாக்காளர்களாகிய  நீங்கள் சுய சிந்தனையோடு வாக்குபதிவு நாளான்று வாக்களிக்க வேண்டும்’ என்றார். தொடர்ந்து மின்னணு வாக்குபதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், மகளிர் திட்ட இயக்குநர் மற்றும் விழிப்புணர்வு மண்டல அலுவலர் பாபு, கல்லூரி முதல்வர் ஷீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Coonoor ,
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...