குன்னூரில் கேரட் விலை உயர்வு

குன்னூர், மார்ச் 19:குன்னூரில் கேரட் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊட்டி மற்றும் கோத்தகிரி பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறி விவசாயம் அதிகளவில் செய்யப்படுகிறது. கால நிலைக்கு ஏற்றவாறு கேரட், உருளைக்கிழங்கு,  பீட்ரூட் என விவசாயிகள் பயிர்செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள், மேட்டுப்பாளையம், சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. குறிப்பாக, மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு அதிகளவில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது கேரட் பயிரிட்டு 5 முதல் 6 மாதம் வரை பயிர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் ஆட்கள் கூலி என அதிகளவில் செலவு ஆவதால் சிறு குறு விவசாயிகள் கேரட் பயிரிட பெருமளவில் ஆர்வம் காட்டுவதில்லை. ஏக்கர் பரப்பில் நிலம் வைத்திருப்பவர்கள் மட்டுமே அதிக பரப்பளவில் கேரட் பயிரிட்டுள்ளனர். தற்போது மேட்டுப்பாளையம் மார்க்கெட் பகுதியில் கேரட் கிலோ  ரூ.30 முதல் ரூ.37 வரை விற்பனையாகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

>