×

குரும்பூரில் திமுக கூட்டணி கூட்டம் திமுக தேர்தல் அறிக்கையை வீடு வீடாக விநியோகித்து பிரசாரம் செய்யுங்கள் கனிமொழி எம்பி பேச்சு

திருச்செந்தூர், மார்ச் 18: மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் குரும்பூரில் நடந்தது. கூட்டத்திற்கு திமுக மகளிரணி செயலாளரும், தென்மண்டல தேர்தல் பொறுப்பாளருமான கனிமொழி எம்.பி தலைமை வகித்து பேசியதாவது:  உங்களது கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக்கூடியவர் இங்கு திமுக வேட்பாளராக போட்டியிடும் அனிதாராதாகிருஷ்ணன். நான் டெல்லியில் இருந்தாலும், சென்னையில் இருந்தாலும் என்னிடம் எப்போது போனில் பேசினாலும் திருச்செந்தூர் தொகுதி மக்களுக்கு தேவையான திட்டங்கள் பற்றித்தான் பேசுவார். எனவே அவர் நிச்சயம் இந்தத் தொகுதியில் வெற்றி பெற வேண்டும். மத்திய பாஜ. அரசாலும், தமிழகத்தில் ஆட்சி செய்யும் அதிமுக அரசாலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முடிவு கட்டவும், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கவும் நீங்கள் திமுகவுக்கு வாக்களித்து அனிதாராதாகிருஷ்ணனை வெற்றி பெறச்செய்ய வேண்டும். திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை வீடு வீடாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘திருச்செந்தூர் தொகுதியில் உங்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றியுள்ளேன். திருச்செந்தூர் தொகுதியில் ஒரு சில குளங்களை தூர் வார வேண்டியுள்ளது. அதை விரைவில் நிறைவேற்றுவேன். நான் ஜாதி, மத பாகுபாடு இல்லாமல் உங்களுக்காக பாடுபட்டுள்ளேன். எனவே வருகிற சட்டமன்ற தேர்தலிலும் எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்கவேண்டும்’ என்றார்.
 கூட்டத்தில் ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவீன்குமார், மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், காங் பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் புதுக்கோட்டை செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் தமிழினியன், இந்திய கம்யூ. மாவட்ட துணைச்செயலாளர் கரும்பன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் முரசுதமிழப்பன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் மாரிசெல்வன், ஆதித்தமிழர் கட்சி அமைப்பு செயலாளர் மாரியப்பன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மோத்தி மொசம்பில், திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ரமேஷ், ஆழ்வார்திருநகரி வட்டார காங்., தலைவர் பால்சிங், காங்., விவசாய அணி மாவட்ட செயலாளர் வேல்ராமகிருஷ்ணன், வட்டார காங் தலைவர் சற்குரு, மதிமுக மாவட்ட அவைத்தலைவர் மத்தேயு ஜெபசிங், திமுக செயற்குழு உறுப்பினர்கள் ஜெகன், பிரம்மசக்தி, மாவட்ட திமுக துணைச் செயலாளர்கள் காதர், ஆறுமுகபெருமாள், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜெசி பொன்ராணி, ஆழ்வை யூனியன் சேர்மன் தினகர், மேல ஆத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார், கச்சனாவிளை பஞ்சாயத்து தலைவர் கிங்ஸ்டன், புன்னக்காயல் பஞ்சாயத்து தலைவர் சோபியா, பேரூர் செயலாளர்கள் நாசரேத் ரவிசெல்வக்குமார், ஆத்தூர் முருகபெருமாள், தென்திருப்பேரை முத்துவீரபெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற செயலாளர் ராம்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் விடுதலை செழியன், ஜமீன்சாலமோன், கந்தசாமி, வழக்கறிஞர்கள் பாரிகண்ணன், ஸ்டீபன் தாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஒன்றிய பொருளாளர் பாதாளமுத்து நன்றி கூறினார்.

Tags : DMK ,Kurumbur ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு