×

ஆக்கிரமிப்பற்ற நடைபாதை இருக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து

 

புதுடெல்லி: சாலைகளில் உள்ள நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகள் குறித்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் அரதே ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜிடம், “பாதசாரிகளுக்கான இடங்களில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் இருப்பதையும், அது வாகன பாதைகளில் இருந்து முறையாக பிரிக்கப்பட்டிருப்பதையும் உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். சாலை உள்ள இடங்களில் எல்லாம் பாதசாரிகளுக்கான இடம் இருக்க வேண்டும். கயிறு அல்லது வேறு ஏதேனும் ஒன்றை கொண்டு அதை வரையறுத்து, அதில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் பார்த்து கொள்ளுங்கள்’’ என்று கூறினர்.

Tags : Supreme Court ,New Delhi ,B.S. Narasimha ,Alok Arade ,Additional Solicitor General ,K.M. Nataraj ,Union Government ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...