×

வரி செலுத்த தவறிய உரிமையாளர்களின் பெயர் வெளியீடு

 

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு சொத்து உரிமையாளர்களால் செலுத்த வேண்டிய நிலுவை சொத்துவரி வசூலிப்பதற்கு அறிவிப்பு வழங்குதல், நிலுவை விவரம் குறித்த அறிவிப்பினை கட்டிடங்கள் மீது ஒட்டுதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சிக்கு பெரும் தொகை நிலுவை வைத்துள்ள முதல் 100 சொத்து உரிமையாளர்களின் பெயர் பட்டியல் மாநகராட்சி வலைதளத்தில் (GCC Website) வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய மொத்த நிலுவை தொகை ரூ.31.39 கோடி. மேலும், இப்பட்டியலில் குறைந்தபட்சம் ரூ.8 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.4.80 கோடி வரை நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்களின் விவரங்கள் பதிவிடப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இந்த தகவலை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.

 

Tags : Chennai ,Chennai Corporation ,Chennai Corporation… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து