×

திண்டுக்கல், நத்தம் தொகுதிகளில் அமமுக, மநீம சார்பில் வேட்பு மனு தாக்கல்

திண்டுக்கல்/நத்தம், மார்ச் 18: திண்டுக்கல் தொகுதி அமமுக, மநீம வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுவதை அடுத்து வேட்பு மனு கடந்த 12ம் தேதி துவங்கியது. 19ம் தேதி முடிவடைகிறது. திண்டுக்கல் தொகுதியில் இதுவரை 7 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று அமமுக வேட்பாளர் ராமுதேவர், மநீம வேட்பாளர் ராஜேந்திரன் தேர்தல் அலுவலர் காசிச்செல்வியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது ராமுதேவர் கூறுகையில், ‘‘திண்டுக்கல்லில் அமைச்சர் ஊழலின் ஊற்றுக்கண்ணாக உள்ளார். அவரது மகன்கள்தான் அனைத்து காண்ட்ராக்ட் எடுக்கிறார்கள். அதனால்தான் ரோடுகள் சரி இல்லை. மக்கள் குடிநீருக்கு அலைய வேண்டி உள்ளது என்றார். நத்தம் தாலுகா அலுவலகத்தில் நேற்று அமமுக சார்பில் ராஜா தேர்தல் நடத்தும் அலுவலர் திருமலையிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும் சுயேட்சைகள் எல்லப்பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார், கே.அய்யாபட்டியை சேர்ந்த கர்ணன், அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஆகிய 3 பேர் தனித்தனியாக வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று மட்டும் நத்தத்தில் அமமுக வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் உட்பட 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்னர்.

Tags : Dindigul ,Natham ,Ammuka ,Manima ,
× RELATED ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழாவில்...