×

ராமர் கோயில் விவகாரம் எம்பி பப்பு யாதவ் மீது செருப்பு வீச்சால் பரபரப்பு

புதுடெல்லி: ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 31ம் தேதி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தின் போது நாடகம் நடத்தப்பட்டது. அதில் சாமியாராக பீகார் பூர்னியா தொகுதி சுயேச்சை எம்பி பப்பு யாதவ் பங்கேற்றார். அவருக்கு ராகுல் காந்தி நன்கொடை தருவது போல் சித்தரிக்கப்பட்டது. இதில் மத உணர்வுகளை புண்படுத்தியதாக ராகுல் காந்தி, பப்பு யாதவ் உள்ளிட்டோர் மீது வாரணாசி போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக டெல்லியில் நேற்று தனது வீட்டில் எம்பி பப்பு யாதவ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கூறினார். அப்போது, உபி புலந்த்சாஹரை சேர்ந்த சுமித் (34) என்பவர் பப்பு யாதவ் மீது செருப்பை வீசினார். அவரை பப்பு யாதவ் ஆதரவாளர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. சுமித்தை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். தனது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயலை கண்டு அஞ்சப் போவதில்லை என பப்பு யாதவ் கூறி உள்ளார்.

 

Tags : Ram Temple ,Pappu Yadav ,New Delhi ,Bihar ,Purnia ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...