×

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு அதிமுக செய்தி தொடர்பாளராக மேலும் ஒருவர் நியமனம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு: அதிமுகவின் நிலைப்பாடுகள் குறித்து தொலைக்காட்சிகள் மற்றும் இன்னபிற சமூகத் தொடர்பு ஊடகங்களில் எடுத்துரைப்பதற்காக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில், டி.ரஞ்சனாதேவி (தலைமைக் கழகப் பேச்சாளர், வடபழனி, தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்) இணைத்துக் கொள்ளப்படுகிறார்.

அதிமுகவின் நிலைப்பாடுகள் குறித்து, தொலைக்காட்சிகள் மற்றும் சமூகத் தொடர்பு ஊடக நிகழ்ச்சிகளில் ரஞ்சனாதேவியும் பங்கேற்பார். அதிமுக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Edappadi Palaniswami ,AIADMK ,Chennai ,General Secretary ,T. Ranjanadevi ,Chief Ministerial ,Vadapalani ,South Chennai ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து