×

செங்குட்டுவன் எம்எல்ஏ முன்னிலையில் தேமுதிகவினர் 2000 பேர் திமுகவில் இணைந்தனர்

கிருஷ்ணகிரி, மார்ச் 18:கிருஷ்ணகிரியில் மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் அம்மனேரி முனிராஜ் தலைமையில், நிர்வாகிகள், ரசிகர்கள் மற்றும் தேமுதிகவினர் சுமார் 2 ஆயிரம் பேர், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு செங்குட்டுவன் எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்று பேசுகையில், ‘இன்னும் 2 மாதத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் உதயமாகிறது. அப்போது ஏழை, எளியோர் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்,’ என்றார். நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். அணிகளின் நிர்வாகிகள் வெங்கட்டப்பன், தனசேகரன், வாசுதேவன், சந்திரசேகரன், கங்கலேரி சேகர், கோவிந்தசாமி, தேமுதிக அவைத்தவைர் சின்னசாமி, செம்படமுத்தூர் மணி, அம்மனேரி கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Senkuttuvan MLA ,Temujins ,DMK ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு