×

மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்: அகில இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

 

புதுடெல்லி: டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய மாணவர் சங்கத்தின் தேசிய தலைவர் நேஹா போரா நேற்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ஜூலை 20ம் தேதி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளை ஏன் பயன்படுத்தினீர்கள்? பாதுகாப்பு படையினருக்கு அவை ஏன் வழங்கப்பட்டன?

போராட்டக்காரர்களை காயப்படுத்த ஆணிகள் பொருத்தப்பட்ட தடிகள் பயன்படுத்தப்பட்டது ஏன்? இந்த நடவடிக்கைகள் ஒரு மாஜிஸ்டிரேட் அல்லது உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி எடுக்கப்பட்டிருந்தாலும், அரசியல் ரீதியான பொறுப்பு கடைசியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையே வந்து சேரும். அது மாஜிஸ்டிரேட்டின் உத்தரவின் பேரில் நடந்திருந்தால், நீங்கள் எத்தகைய உள்துறை அமைச்சர்?

ஒருசமயம் அது உங்கள் உத்தரவின்படி நடந்திருந்தால், சாதாரண பொதுமக்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளால் சுடக்கூடிய எத்தகைய குற்றவியல் ஆட்சியை நீங்கள் நடத்துகிறீர்கள்? மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு முழு பொறுப்பும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் டெல்லி காவல் ஆணையர் அனுராக் குமார் ஆகியோரையே சாரும். எனவே, யாராவது பதவி விலக வேண்டும் என்றால், அது ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும். டெல்லி காவல் ஆணையர் அனுராக் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்” என இவ்வாறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள், கேள்விகளுடன் வலியுறுத்தினார்.

Tags : Amit Shah ,All India Students' Union ,New Delhi ,Neha Bora ,president ,Cockroach Janata Party ,Delhi ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...