×

கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்தும் தண்ணீர் திறக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

 

சென்னை: கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்தும் தண்ணீர் திறக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை;
கர்நாடகத்தில் காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான கபினியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை நிரம்பி வழிவதையடுத்து அங்கிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் இன்னும் எவ்வளவு காலத்திற்கு திறக்கப்படும், தமிழகத்தின் தேவைக்கு போதுமானதாக இருக்குமா என்பதெல்லாம் அடுத்த சில வாரங்களுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எவ்வளவு மழை பெய்யும் என்பதைப் பொறுத்தே அமையும்.

எனினும் இயற்கையின் கொடையால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது நிம்மதியளிக்கிறது.இன்னொரு அணையான ஹாரங்கி நிரம்பி வழிவதால் அதிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. எனவே, வெள்ளம் போல் வரும் கூடுதல் நீரை சேமித்து வைக்க வசதியாக கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும் தமிழ்கத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.

Tags : Krishnaraja Sagar Dam ,Anbumani ,Chennai ,PMK ,Kabini ,Cauvery ,Karnataka ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து