×

சாதி, மதமற்ற சான்றிதழ் கேட்பவர்களுக்கு உடனே வழங்க சட்டம் இயற்றக்கோரி நடிகர் பார்த்திபன் வழக்கு

 

சென்னை: நடிகர் பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘சாதி, மதமற்றவர் என சான்று கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் வகையில் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கி அரசாணைகள் பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடந்த 2025 ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கும், அப்போதைய அரசுக்கும் இடையில் சுமுக உறவு இல்லாததால் இந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது. தற்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை என்பதால் சட்டம் இயற்றுமாறு உத்தரவிட வேண்டும்.

சாதி, மதமற்றவர் என சான்று வழங்க வகை செய்யும் சட்டம் இயற்றுவதால் வேறு எந்த சட்டத்துக்கும் எந்த பாதிப்பு ஏற்படப் போவதில்லை. தற்போது சாதி மதமாற்றவர் என்று சான்று வழங்க சட்டங்கள் அல்லது உத்தரவுகள் எதுவும் இல்லாததால், புதிதாக சட்டம் இயற்றும்போது, சாதி, மதமற்றவர் என சான்று கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும் என தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது.

Tags : Parthiban ,Chennai ,Madras High Court ,Tamil Nadu government ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து