- முதல் அமைச்சர்
- விஜய்
- பிரவீன் சித்ரவேல்
- செல்வா பிரபு
- காமன்வெல்த் விளையாட்டு
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கிளாஸ்கோ, ஸ்காட்லாந்து…
சென்னை: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மும்முறை தாண்டுதல் போட்டியில் பதக்கங்களை வென்ற பிரவீன் சித்ரவேல் மற்றும் செல்வ பிரபு ஆகியோருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல், வெண்கலப் பதக்கம் வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வீரர்களின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக, வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேலுக்கு ரூ.30 லட்சம், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வ பிரபுவுக்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும். ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த இரு வீரர்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயின்று, முறையான பயிற்சி பெற்றவர்கள் என்பது தமிழ்நாட்டின் விளையாட்டு துறைக்குப் பெருமை சேர்ப்பதாகும். இவர்களின் கடின உழைப்பும், விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் வெற்றியை தேடி தந்ததோடு, ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை அளிக்கிறது. சர்வதேச அரங்கிலும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற எனது வாழ்த்துகள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
