×

திமுக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விடுவிப்பு: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

 

சென்னை: முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.திமுகவின் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிக்கப்பட்டுள்ளார். அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட பெருந்துறை மற்றும் பவானி தொகுதிகள் முறையே ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டு அந்தந்த மாவட்ட செயலாளர்களின் கீழ் நிர்வகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஈரோடு மத்திய மாவட்டத்திற்குரிய சட்டமன்ற தொகுதிகளான பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்திலும், பவானி தொகுதி ஈரோடு வடக்கு மாவட்டத்திலும் இணைக்கப்பட்டு அந்தந்த மாவட்ட திமுக செயலாளர்கள் நிர்வகிப்பார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஈரோட்டில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம். அதிமுகவில் இருந்தபோது ஈரோடு மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த முக்கிய பங்காற்றினார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பெருந்துறை தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அமைச்சராகவும் பணியாற்றினார்.

இதனையடுத்து 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தோப்பு வெங்கடாசலத்திற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தொடர்ந்து தோப்பு வெங்கடாசலம் 2021ம் ஆண்டு திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பெருந்துறை அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளார். இந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக வெல்ல வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்து வருகிறார். இந்நிலையில் தோப்பு வெங்கடாசலம் பதவி பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Former Minister ,Thoppu Venkatachalam ,DMK District ,General Secretary ,Duraimurugan ,Chennai ,DMK Erode Central District ,Perundurai ,Bhavani ,Erode… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து