- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- காவிரி
- புதிய தமிழ்நாடு
- சென்னை
- புதிய தமிழரசுக் கட்சி
- கர்நாடக
- மேக்கேதாடு அணை
- கிருஷ்ணசாமி
- நாம் தமிழர் கட்சி...
சென்னை: மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின்திட்டத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு: தமிழகத்தின் உரிமையை பாதிக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கிற்கு தமிழக அரசியல் கட்சிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆணைய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவித்துள்ள நிலையை அறிந்தும், கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை, பிரதமருக்கு கடிதம் என தமிழக அரசு நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறது.
இந்த இக்கட்டான தருணத்தில் தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தைக்கூட்டிட தமிழக அனைத்து அரசியல் கட்சிகளும் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், அதை உதாசீனப்படுத்திவிட்டு மெத்தனப்போக்குடன் செயல்படும் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசை அனைத்துக் கட்சிக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.தமிழக முதல்வர் ஆர்வம் காட்டியும், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் ‘‘இன்னொரு சந்திப்பில் சந்திக்கலாம்’’எனக் கூறியுள்ளது தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவாகவே இக்கூட்டம் கருதுகிறது.
காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வை கண்டிட அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு தமிழக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உரிய அழுத்தம் கொடுக்கும் வகையில், ஆகஸ்ட் 7ம்தேதி சென்னையில் முதற்கட்டமாக மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.
* அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு
கூட்டத்தை தொடர்ந்து கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘காவிரி விவகாரத்தில் அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் தமிழகத்தின் உரிமைக்காக ஒன்றிணைய வேண்டும் என்பதே கூட்டத்தின் நோக்கம். இன்று கூட்டத்தில் பங்கேற்காத அரசியல் கட்சிகளும் ஆகஸ்ட் 7ம்தேதி நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ள கேட்டுக் கொள்கிறேன். மாஞ்சோலை தொழிலாளர்கள் மீது காவல்துறை அரசியல் சித்ரவதையில் ஈடுபடக்கூடாது’’ என்றார்.
