×

காவிரியில் தண்ணீர் திறந்து விட ஆணையிடும்படி உச்சநீதிமன்றத்தில் விரைந்து வழக்கு தொடர்ந்து நீரை பெற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி, வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரியில் தமிழ்நாட்டுக்கான தண்ணீரை பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக நடைபெறவிருந்த இரு தரப்பு பேச்சுகளுக்கான கதவுகளை கர்நாடக அரசு மூடியதற்கு பிறகு மிகவும் தாமதமாகத்தான் இந்த முடிவை தமிழக அரசு எடுத்திருக்கிறது என்றாலும், காவிரி சிக்கலில் இதுதான் சரியான நடவடிக்கையாகும்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட ஆணையிடும்படி உச்சநீதிமன்றத்தில் விரைந்து வழக்கு தொடர்ந்து நீரை பெற வேண்டும். அதுமட்டுமின்றி, மேகதாது அணை விவகாரத்திலும் ஒன்றிய அரசும், கர்நாடக அரசும் செய்யும் கூட்டு சதியை உரிய தரவுகளுடன் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று. மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தடைவிதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

Tags : Anbumani ,Supreme Court ,Cauvery ,Chennai ,PMK ,Tamil Nadu government ,Tamil Nadu ,Karnataka government ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து