×

திருப்பூர் தெற்கு வேட்புமனு தாக்கல் மையத்திற்கு அ.தி.மு.க. கொடியுடன் வந்த கார் போலீசார் திருப்பி அனுப்பினர்


திருப்பூர், மார்ச் 17:  திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் திருப்பூர் தெற்கு தொகுதிக்காக வேட்பு மனு தாக்கல் மையமாக செயல்பட்டு வருகிறது. இங்கு பல வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் போலீசார் அங்கு வரும் பொதுமக்கள், வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களையும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் மையத்திற்கு 100 மீட்டர் தொலைவிற்குள் அரசியல் கட்சி கொடிகளுடன் வாகனமும், சின்னனும் அனுமதி இல்லை என்ற அறிவிப்பு தேர்தல் விதிமுறைகளில் ஒன்றாக நடைமுறையில் உள்ளது. நேற்று திருப்பூர் தெற்கு வேட்புமனு தாக்கல் மைத்திற்கு அ.தி.மு.க. கொடியுடன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் கூடிய சொகுசு கார் ஒன்று வந்தது. இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காரை திருப்பி அனுப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Tirupur South Nomination Filing Center ,
× RELATED மலைவாழ் குழந்தைகளுக்கு உதவி