×

வாய்க்காலில் 2 சடலம் மீட்பு

காங்கயம், மார்ச் 17: காங்கயம் அருகே செல்லும் வாய்க்கால்களில் தற்போது பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், காங்கயம் அருகே, சென்னிமலை சாலை, திட்டுப்பாறை பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் நேற்று கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்டது. தகவல் அறிந்து வந்த காங்கயம் போலீசார் சடலத்தை மீட்டு அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் பழையகோட்டை சாலை, நாட்டார்பாளையம் பிரிவு அருகே செல்லும் பிஏபி வாய்க்காலில் கரை ஒதுங்கிய 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆணின் சடலத்தையும் காங்கயம் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED மலைவாழ் குழந்தைகளுக்கு உதவி