×

காவிரி பிரச்னையை திசை திருப்ப அடுத்ததாக காவிரி ஆற்றங்கரையில் கூட ஆய்வு நடத்தலாம்: கனிமொழி எம்பி விமர்சனம்

 

சென்னை: திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: எல்லாவற்றிலும் திசைத்திருப்பும் அரசியலைச் செய்துவரும் தவெக அரசு, காவிரி பிரச்னையைத் திசைத்திருப்ப அடுத்ததாக காவிரி ஆற்றங்கரையில் கூட “ஆய்வு” நடத்தலாம். மாநில உரிமைகளை அடகு வைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு, விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்கலாம் என்று நினைக்கிறதா தவெக அரசு?.

டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதோடு, தற்போது பாதி தமிழ்நாட்டிற்கு குடிநீர் பிரச்னை வருமளவுக்கு காவிரி விவகாரம் சென்றுவிட்டது. தவெக அரசு இனியும் இப்பிரச்னையில் மவுனம் காக்காமல், உடனடியாக நடவடிக்கை வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : Cauvery ,Cauvery river ,Kanimozhi ,Chennai ,DMK ,Deputy General Secretary ,Kanimozhi MP ,Thavega government ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து