×

ரூ.841 டூ ரூ.6,166 கரன்ட் பில்: மின்வாரிய ஆபீஸ் முற்றுகை

 

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் உள்ள வடக்குப் பேட்டை, பிரிட்டோ காலனி, பாரதி நகர், தண்டு மாரியம்மன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கடந்த ஜூலை மாதம் மின் கணக்கீடு செய்த நிலையில் கடந்த முறை வசூலிக்கப்பட்ட மின் கட்டணத்தை விட தற்போது பல மடங்கு அதிகரித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே மின் கட்டணம் எவ்வாறு அதிகரித்தது என்பது குறித்து கேட்பதற்காக அப்பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்ற பொதுமக்கள் மின்வாரிய அதிகாரியிடம் எங்களுக்கு இலவச மின்சாரமே வேண்டாம்.

கடந்த முறை 841 ரூபாய் செலுத்தியதாகவும், இந்த முறை 6,166 ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளதாகவும், எப்போதும் போலவே மின்சாரம் உபயோகம் செய்த நிலையில் இவ்வளவு மின் கட்டணம் எப்படி வந்தது என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மின்வாரிய அதிகாரிகள் மின் கட்டணம் அதிகமாக உள்ள வீடுகளில் மின்சார மீட்டர்களை மீண்டும் ஆய்வு செய்து கணக்கீடு மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags : Sathyamangalam ,Satyamangalam ,Erode district ,North Patta ,Brito Colony ,Bharati Nagar ,Thandu Mariyamman Temple Road ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து