×

உன்னோட தனிப்பட்ட ரகசியங்களை சொன்னா சின்னாபின்னமாயிருவே: அமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் பெண்ணின் ஆடியோ வைரல்

 

மதுரை: உன்னோடு தனிப்பட்ட ரகசியங்களை சொன்னா சின்னாப்பின்னமாயிருவே என்று பெண் அமைச்சரை மிரட்டும் வகையில் பெண் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சக அமைச்சருடன் மோதல், பேனர் பெயருக்கு முன்னுரிமை கொடுக்காததால் மேடையில் கலெக்டரிடம் வாக்குவாதம் செய்தது, கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தது என தொடர் சர்ச்சையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி சிக்கி உள்ளார். தற்போது, ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவும், அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு எதிரானது என்று கூறப்படுகிறது. அந்த ஆடியோவில் ஒரு பெண் பேசும் விவரம்:

உங்களிடம் ஒரு விண்ணப்பத்தை கொடுக்கிறேன். நேரில் வந்தால் உங்களை பார்க்க விடமாட்டாங்க. அக்கா என்ற உரிமையில் சொல்கிறேன். எனது குழந்தைக்கு நடந்த விஷயங்களுக்கு உங்களிடம் புகார் கொடுத்து எந்த நடவடிக்கையும் நீங்கள் எடுக்கவில்லை. இது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் இருக்கும் இடங்களில் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டியது தான் உங்கள் பணி. அதற்காக தான் உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

எனது குழந்தை இறந்து பல ஆவணங்கள் மறைக்கப்பட்டு கொண்டே வருகிறது. நீங்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் நிறைய விஷயங்கள் பேச வேண்டுமென சொன்னீர்கள். ஆனால், தற்போது வரை என்னிடம் பேசவில்லை. அதேநேரம், இரவு நேரங்களில் தனிபட்ட நபர்களுடன் உல்லாசமாக பேசுவதற்கு உங்களுக்கு நேரம் இருக்கிறது. அந்த உல்லாச பேச்சுக்கள், உல்லாச வாழ்க்கையின் அவலங்களை நான் எடுத்து வெளியே விடும் நேரமும் எனக்கு வரும்.

கவலைப்படாதீங்க… மீடியாவில் எல்லாம் போட்டு உங்களை அசிங்கப்படுத்த மாட்டேன். நேரடியாக விஜய்க்கே அவற்றை அனுப்பி வைப்பேன். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க இந்த அரசின் முக்கிய பதவியில் உள்ள அமைச்சரிடம், நீங்கள் முடியாது என்று, சொன்னீர்கள் என்றால் உங்கள் சொந்த வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை வெளியிட நான் தயாராக உள்ளேன்.

நேத்து தான் அந்த அமைச்சரிடம் உன்னை பற்றி பேசியிருக்கேன். அவர் ஆபீஸ்க்கு வர சொல்லி இருக்காரு. அவர் மட்டுமல்ல… முக்கியமான நபர்களிடம் உனது அந்தரங்க விஷயங்களை நான் கொடுத்துவிட்டால், நீ சிக்கி சின்னாபின்னமாகிடுவாய். அமைதியா உன்னை பதவியிலிருந்து தூக்கும் வேலைகளை மற்றவர்கள் பார்த்துவிடுவார்கள்.

அதை புரிந்து கொண்டு எனக்கு உதவி செய். எனக்கு உதவி செய்யக்கூட உன்னை மிரட்ட வேண்டிய நிலை வந்துவிட்டது. நான் உன்னை மிரட்டவில்லை. உண்மையை வெளியிடுவேன் என சொல்கிறேன். உனக்கு புரியும்னு நினைக்கிறேன். உனக்கு மட்டும் தான் ராக்கெட் ராஜாவை தெரியும் என்றில்லை.இவ்வாறு ஆடியோ முடிவடைகிறது.

Tags : Madurai ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து