×

ரூ.1,413 கோடி சொத்துக்களுடன் முதலிடம் இந்தியாவின் பணக்கார முதல்வர் டி.கே.சிவகுமார்: ரூ.55 லட்சம் சொத்துடன் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கடைசி இடம்

 

கொல்கத்தா: கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் ரூ.1,413 கோடி சொத்துடன் சொத்து பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.  இதுகுறிதது ஜனநாயக சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்) நேற்று வௌியிட்ட அறிவிப்பில், “ அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 31 முதல்வர்களின் சுய உறுதிமொழி அளிக்கப்பட்ட பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் ரூ.1,413 கோடியுடன் முதலிடத்தில் உள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு ரூ.931 கோடி சொத்துடன் 2வது இடத்திலும், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் ரூ.648 கோடி சொத்துடன் 3வது இடத்திலும், அருணாச்சலபிரதேச முதல்வர் பெமா காண்டு ரூ.332 கோடி சொத்து மதிப்புடன் 4வது இடத்திலும் உள்ளனர். ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ரூ.55.24 லட்சம் சொத்துடன் கடைசி இடத்தில் உள்ளார்.

இதேபோல், மேற்குவங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ரூ.85.87 லட்சம் சொத்து மதிப்புடன் உமர் அப்துல்லாவுக்கு அடுத்த குறைந்த சொத்துடையவராக உள்ளார். ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மாவின் சொத்து மதிப்பு ரூ.1.03 கோடிக்கும் அதிகமாகும்.  ஆய்வு செய்யப்பட்ட 31 முதலமைச்சர்களில் 4 பேர்(அதாவது 13 சதவீதம் பேர்) ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துகளை கொண்டுள்ளனர். மேலும், இந்த 31 முதல்வர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.118.07 கோடியாக உள்ளது” என தெரிவித்துள்ளது.

 

Tags : India ,Chief Minister ,DK Shivakumar ,Kashmir ,Omar Abdullah ,Kolkata ,Karnataka ,Association for Democratic Reforms ,ADR ,Union Territories… ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...