×

அனைத்து கட்சிகளும் ஒட்டுமொத்த குரலாக ஒலித்து மேகதாது திட்டத்தை முறியடிக்க ஓரணியில் திரள வேண்டும்: மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய நீர்வளத்துறை இணையமைச்சர் ராஜ்பூஷன் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பில் எந்த தடையும் இல்லை என்று பேசியது தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காவிரி நடுவர்மன்றமும், உச்ச நீதிமன்றமும் வழங்கிய இறுதி தீர்ப்பின்படி காவிரி படுகை மாநிலங்களை பாதிக்கிற வகையில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது. இந்நிலையில் பாஜ அமைச்சர் கர்நாடக அரசுக்கு ஆதரவாக பேசியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது. எனவே, தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒட்டுமொத்த குரலாக ஒலித்து கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்தை முறியடிக்க ஓரணியில் திரள வேண்டும்.

Tags : Mekedadu ,Manickam Thakur ,Chennai ,Tamil Nadu Congress ,Union Minister of State for Water Resources ,Rajbhushan ,Parliament ,Supreme Court ,Karnataka government ,Mekedadu… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து