×

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வெற்றிபெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 16,083 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சி.முனுசாமியை தோற்கடித்தார்.

இதையடுத்து, கே.சி.வீரமணியின் வெற்றியை எதிர்த்து வாக்காளர் ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கே.சி.வீரமணி தரப்பில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள நிலையில், அந்த தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத வேலூர் மாவட்டம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த மனுதாரார் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

எனவே, இந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி இளந்திரையன், அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : minister ,K.C. Veeramani ,Madras High Court ,Chennai ,AIADMK ,Jolarpettai ,Tirupattur ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து