×

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம்: கிருஷ்ணசாமி அழைப்பு

சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கை: 3.5 டி.எம்.சி. நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்தும், ‘ஒரு சொட்டு நீர் கூட திறந்து விட முடியாது, காவிரி ஒழுங்காற்றுக்குழுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடுவோம்’ என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் உள்ள ஆளும் காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் ஒருமித்த குரலில் குரல் கொடுக்கிறார்கள்.

தமிழகத்தில் அதுபோன்ற ஒரு நிலையை உருவாக்கும் பொருட்டும், தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்ட மாஞ்சோலை, கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் கூடலூர், தேனி மாவட்டம் மேகமலை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் ஆறு தலைமுறைகளுக்கும் மேலாக வாழும் மலைவாழ் மக்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதைத் தடுத்து, அவர்களுக்கு 2006ம் ஆண்டு வன உரிமைச் சட்டப்படி வாழ்வுரிமையை நிலைநாட்டவும், புதிய தமிழகம் கட்சியின் முன்னெடுப்பில் வரும் 1ம் தேதி காலை 10.30 மணியளவில் சென்னை, தி.நகர், தனியார் ஓட்டலில் தமிழக அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தனித்தனியே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி நதிநீர் பங்கீடு குறித்த அவசர அவசிய நிலையைக் கருத்தில் கொண்டு ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும் தவறாது கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.

Tags : Mekedatu dam ,Krishnasamy ,Chennai ,Puthiya Tamil Nadu Party ,Cauvery Regulatory Committee ,TMC ,Karnataka ,Chief Minister ,Supreme Court ,Cauvery Regulatory Committee'… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து