×

மேகதாது விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் பொறுப்பின்றி பேசுவதா? ஜி.கே.வாசன் கண்டனம்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேகதாது அணை பிரச்னையில் தமிழக அரசியல் கட்சிகள் ஒத்த கருத்தோடு ஒரே நிலையில் குரல் கொடுக்க வேண்டும்.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னையில் ஒன்றிய அரசினுடைய இத்துறை சம்பந்தப்பட்ட துணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் காவிரி நீர் குறித்து பதில் அளிக்கையில் பொறுப்பற்ற முறையில் கூறியிருப்பது, பொறுப்புள்ள அமைச்சருடைய நியாயமான நடுநிலையான செயலாக இல்லை. மேகதாது விவகாரத்தில் ஒன்றிய அரசின் நீர்வளத்துறை தங்களுடைய தவறான நிலைப்பாட்டை திருத்திக்கொள்ள வேண்டும் என்று தமாகா வலியுறுத்துகிறது.

Tags : Union ,Minister ,Mekedadu ,G.K. Vasan ,Chennai ,TAMAK ,Tamil Nadu government ,Karnataka government ,Tamil Nadu ,Mekedadu dam ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து