×

நாளை நடைபெற உள்ள திருவிழாவை முன்னிட்டு வரசித்தி விநாயகர் கோயில் 12 டன் காய்கனிகளால் அலங்காரம்

சித்தூர் : நாளை நடைபெற உள்ள திருவிழாவை முன்னிட்டு வரசித்தி விநாயகர் கோயில் 12 டன் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சித்தூர் ஸ்ரீகாணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் மற்றும் ஸ்ரீ மணிகண்டேஸ்வர சுவாமி கோயிலில் நாளை ஷாகம்பரி தேவி திருவிழாவை முன்னிட்டு பல்வேறு வகையான காய்கறிகளால் அலங்கரிக்கப்பட உள்ளதால் பக்தர் பலமனேர், வட்டிப்பள்ளி, கோலார், முல்பாகல் போன்ற பகுதிகளில் உள்ள சந்தைகளில் இருந்து சுமார் 12 டன் எடை கொண்ட காய்கறிகளை நன்கொடையாக கோயில் சேர்மன் மணி நாயுடு அவர்களிடம் வழங்கினார்.

காய்கறிகளை பெற்றுக் கொண்ட பக்தரின் குடும்பத்தாருக்கு சிறப்பு தரிசனம் செய்து வைத்து தீர்த்த பிரசாதங்கள் உள்ளிட்டவை வழங்கினார். இதில் கோயில் செயல் அலுவலர் பென்சில கிஷோர், கோயில் இணை செயல் அலுவலர் ரவீந்திரபாபு, கண்காணிப்பாளர் கோதண்டபாணி, சிட்டிபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Varasiti ,Vinayagar Temple ,Chittoor ,Srikannipakkam ,Varasiti Vinayagar Temple ,Sri Manikandeswara Swami Temple ,Shagambari Devi Festival ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...