×

ஒன்றிய அமைச்சரை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்.பி.! எலுமிச்சை தோட்டத்திற்கு ரூ.4.21 லட்சம் மானியம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தோட்டக்கலை திட்டத்தில் தனது எலுமிச்சை தோட்டத்திற்கு, ரூ.4 லட்சத்து 21 ஆயிரத்தை பாஜக எம்பி ஒருவர் மானியமாக பெற்றுள்ளார். ராஜஸ்தானின் ஜலோர் (Jalore) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான லும்பாராம் சௌத்ரி என்பவரே தனது எலுமிச்சை தோட்ட சாகுபடிக்காக மானியம் பெற்றவர் ஆவார். இவர் தனது பண்ணையில் எலுமிச்சை பயிரிடுவதற்காக தேசிய தோட்டக்கலை வாரியத் திட்டத்தின் கீழ் ரூ.4.21 லட்சம் மானியம் பெற்றுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டம் வடேலி கிராமத்தில் உள்ள அவரது 6 ஏக்கர் பண்ணை நிலத்தில் எலுமிச்சை பயிரிட இந்த மானிய உதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒன்றிய அமைச்சராக இருக்கும் பகீரத் சவுத்ரி தனது சொந்த வெள்ளரிப் பண்ணைக்காக ரூ.99 லட்சம் மானியம் பெற்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், எலுமிச்சை சாகுபடிக்காக மானியம் பெற்ற மற்றொரு பாஜக எம்பியான லும்பாராம் சௌதரியின் செயலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மானியங்கள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு அளித்த பதிலில் இந்த தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : BJP ,Union minister ,Jaipur ,Rajasthan ,Jalore Constituency ,Lumbaram Chaudhry ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...