டெல்லி: விவசாயத்தில் யூரியாவுக்கு பதிலாக அமோனியாவை நேரடியாக பயன்படுத்த ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. நாட்டில் யூரியா உரத்தின் இறக்குமதி சார்பை குறைக்கும் நோக்கில் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அமோனியாவில் 82% நைட்ரஜன் இருப்பதால் குறைந்த அளவில் பயிர்களுக்கு அதிக நைட்ரஜன் சத்தை தர முடியும். உபரி அமோனியாவை விவசாய பயன்பாடு, உர உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. விவசாயத்தில் அமோனியாவை பயன்படுத்தும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து 4-வது நாடாக இந்தியா உள்ளது.
