×

இடுக்கு பிள்ளையார் கோயிலில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

 

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் பரணிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இடுக்கு பிள்ளையார் கோயிலில் தரிசனம் செய்த ஆந்திராவை சேர்ந்த 36 வயதுடைய மணிக்குமார் என்பவர் மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் திருக்கோயில் மூலம் உடல் பருமனானவர்கள், உடல்நலக்குறைவு உள்ளவர்கள், வயது முதிர்ந்தவர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்ற விவரம் குறித்த அறிவிப்பு பதாகைகள் தமிழ், ஆங்கிலம், தெலுங்கில் நிறுவப்பட்டுள்ளது.

மேலும் திருக்கோயில் முகப்பில் 1 அடி அகலம் கொண்ட நபர்கள் மட்டுமே உள்ளே செல்லும் வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோயிலில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும். பவுர்ணமி நாட்களில் மட்டும் நேர கட்டுப்பாட்டுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். அவசர உதவிக்கு 9047937733, 9445086172, 9498100439, 843811175 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Tags : Idukku Pillayar Temple ,Tiruvannamalai ,Tiruvannamalai Annamalaiyar Temple ,Joint Commissioner ,Paranitharan ,Andhra Pradesh ,Manikumar ,Idukku ,Pillayar Temple ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து