×

திமுகவில் இணைந்த பாமக நிர்வாகிகள்

 

திருவள்ளூர், ஜூலை 27: திருவள்ளூர் ஒன்றிய பாமக இளைஞர் அணியினர் 50 பேர் கட்சியில் இருந்து விலகி திமுக மாவட்ட செயலாளர் ஆவடி சாமு நாசர் முன்னிலையில் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் ஒன்றிய பாமக இளைஞர் அணி செயலாளர் சந்தோஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அக்கட்சியிலிருந்து விலகி திமுக தலைவரும்,

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் முன்னிலையில், திருவள்ளூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சே.பிரேம் ஆனந்த் ஏற்பாட்டில் பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியின் போது ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கசுவா ராஜி, பார்த்திபன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

Tags : PMK ,DMK ,Thiruvallur ,Tiruvallur Union PMK Youth Wing ,DMK District ,Avadi Samu Nassar ,Tiruvallur Union PMK Youth Wing… ,
× RELATED வீரகநல்லூர் ஊராட்சியில் சீரான குடிநீர் வழங்க கோரிக்கை