×

100 பனை மரங்கள் தீயில் எரிந்து நாசம்

 

போச்சம்பள்ளி, ஜூலை 27: மத்தூர் ஒன்றியத்தில் பெணுகொண்டாபுரம் பெரிய அமைந்துள்ளது. சுமார் 234 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியில், ஆயிரக்கணக்கான பனை மரங்கள் வளர்ந்துள்ளது. இதனால் ஏரி முழுவதும் பனை மரங்களாக காணப்படுகிறது. வறட்சியிலும் நீரை தேக்கி வைக்கும் வல்லமை வாய்ந்ததாக பனை மரங்கள் உள்ளன. இதனால் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் பனம் பழத்தை ஏரிகரையோரம், விளை நிலங்களின் ஓரங்களில் நட்டு வைத்து பராமரித்து வருகிறார்கள். இந்நிலையில், ஏரியில் மர்ம நபர்கள் புகை பிடித்து சிகரெட்டை அணைக்காமல் வீசியுள்ளனர். இதில், சருகுகளில் பட்டு, அப்பகுதியில் தீ பற்றி எரிந்தது. இந்த மரங்களில் பரவியது. அப்போது, ஏரிக்கரையோரங்களில் இருந்த சுமார் 100 பனை மரங்கள் தீயில் கருகியது.

இதை கண்டு அருகில் இருந்தவர்கள் போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில், நிலைய அலுவலர் (பொ) சீனிவாசன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். தீ விபத்தால் சுமார் 100 பனை மரங்கள் தீயில் கருகியது. இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால், அருகில் இருந்த விவசாய பயிர்கள் தீ விபத்தில் இருந்த தப்பின. இதனால், விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து தப்பினர்.

 

Tags : BOCHAMPALLI ,KRISUKONDAPURAM ,MATUR UNION ,
× RELATED கற்றல், கற்பித்தல் வழிகாட்டுதல் குழு