காங். வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் சி.எஸ்.ஐ. பிஷப்பிடம் ஆதரவு திரட்டினார்

கோவை, மார்ச் 16: திமுக கூட்டணியில் கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். இதையடுத்து, வாக்காளர்களை நேரில் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. கோவை திருமண்டலம் பேராயர் தீமோத்தி ரவீந்திரை நேற்று சந்தித்தார். பின்னர், அவரிடம் ஆசி பெற்றார். கிறிஸ்துவ மக்களின் வாக்குகளை தனக்கு அளிக்க வேண்டும் எனவும், பிஷப் ஆதரவு வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தவிர, கிறிஸ்துவ மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி கொடுக்கப்படும் எனவும், அவர்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

கிறிஸ்துவ இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்றார். இதையடுத்து, திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.

Related Stories: