×

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி திமுக வேட்பாளர் பையா (எ) ஆர். கிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்

கோவை, மார்ச்.16:  கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரும்,  கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான பையா என்ற ஆர். கிருஷ்ணன் நேற்று பிற்பகல் 3 மணிக்கு கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள வடக்கு கோட்டாட்சியர் தேர்தல் அலுவலகத்தில் கோவை வடக்கு கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர் ரவிசந்திரனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின்  கவுண்டம்பாளையம் தொகுதி பொறுப்பாளர் பி.வி.மணி ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக அவர் குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டு மனு தாக்கல் செய்ய புறப்பட்டார். அப்போது நிர்வாகிகள் உற்சாகமாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் மதிமுக மாவட்டச் செயலாளர் மோகன் குமார்,  விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் பாவலன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்ரமணியம், பொதுக்குழு உறுப்பினர்கள் கதிர்வேல்சாமி,  பழனிசாமி, சுதா விமலன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் வடவள்ளி  துரைசாமி, நந்தகுமார், கணேசமூர்த்தி, குப்புசாமி, மணி(எ)விஜயகுமார், சுப்பையன், சுந்தரம், ரகுபதி, தியாகராஜன், மதன்,  கவிதா, சிவக்குமார், சுரேஷ்,மோகன் குமார், கவுண்டம்பாளையம் ஜவஹர், பகுதி கழக செயலாளர்கள் மதியழகன், அருள்குமார், சிவா(எ)பழனிச்சாமி, பொன்னுசாமி,  ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் கார்த்திக், கிருஷ்ணகுமார், சுரேஷ் குமார் பேரூர் கழக செயலாளர்கள் ஜனார்த்தனன், சுரேந்திரன், விஸ்வபிரகாஷ், வீரபத்திரன் அணி அமைப்பாளர்கள் அருள்குமார், ராசு, சண்முகம், கார்த்திகேயன், கணேஷ், பார்த்திபன், மாலதி, விஜயகுமார் , உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Coimbatore ,Countampalayam ,DMK ,Piya (A) R. Krishnan ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...