×

வட்டி தொழில் செய்த பெண் படுகொலை

தேனி: தேனி, பழைய போஸ்ட் ஆபீஸ் ஓடைத்தெருவைச் சேர்ந்தவர் ராதா (60). வட்டிக்கு பணம் கொடுத்து வாழ்க்கை நடத்தி வந்தார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, சணல் கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து தேனி எஸ்பி பிரவீன் கவுதம் வந்து விசாரித்தார்.

விசாரணையில், நேற்று காலை ராதா வெளியே வந்தபோது, மர்ம நபர்கள் புகுந்து சணல் கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கியும், தலையை தரைப்பகுதியில் இடித்தும் கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. வீட்டுமனை வாங்குவதற்காக அவர் வைத்திருந்த தொகையை கொள்ளையடிக்க வந்தவர்கள் கொலை செய்தார்களா அல்லது வட்டிக்கு பணம் கொடுத்ததில் முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா என போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Theni ,Radha ,Post Office ,Odai ,Theru ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து