×

சாமிதோப்பில் ஆயுதப்படை போலீஸ்காரர் மனைவி தற்கொலை கடிதம் சிக்கியது, ஆர்டிஓ விசாரணை

தென்தாமரைகுளம், மார்ச் 16:
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பெருமாள்புரத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். அவரது மனைவி செல்வபாய். இந்த தம்பதியின் மகள் ஷிவானி (23). பொறியியல் பட்டபடிப்பு 3ம் ஆண்டு படித்து வந்த இவருக்கும், நாகர்கோவில் அருகே உள்ள எறும்புக்காடு பகுதியை சேர்ந்த நாகராஜன் (28) என்பவருக்கும் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. நாகராஜன் நாகர்கோவில் ஆயுதப்படை முகாமில் போலீசாக பணியாற்றி வருகிறார். திருமணத்துக்கு பிறகு தம்பதி சாமிதோப்பில் உள்ள ஒரு குடியிருப்பில் வீடு எடுத்து வசித்து வந்தனர். அருகில் உள்ள மற்ெறாரு வீட்டில் நாகராஜனின் பெற்றோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை நாகராஜன் இரவு பணிக்கு புறப்பட்டார். அவர் சென்ற சிறிது நேரத்துக்கு பிறகு ஷிவானியை காணவில்லை. அவரது அறை பூட்டப்பட்டிருந்தது. இதனால் நாகராஜனின் பெற்றோர் உறவினர்கள் உதவியுடன் அறை கதவை உடைத்து பார்த்தனர். அப்போது ஷிவானி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

இது குறித்து ஷிவானியின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மகளின் நிலையை பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஷிவானியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து தென்தாமரைகுளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் தங்கி இருந்த அறையை சோதனையிட்டனர். அப்போது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு கடிதம் இருந்தது. அதில் எனது மரணத்துக்கு யாரும் காரணமில்லை. மன உளைச்சல் காரணமாக இந்த முடிவை எடுக்கிறேன் என்று எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அப்போது நாகராஜன் ஷிவானியை தரக்குறைவாக பேசி டார்ச்சர் செய்து வந்ததாக தெரிகிறது. இது தவிர அவரது குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து அவர் தற்கொலை முடிவை எடுத்தது தெரியவந்து உள்ளது. இது குறித்து சப்- இன்ஸ்பெக்டர் ஜாண்கென்னடி வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் விசாரணை நடத்தி வருகிறார். ஷிவானிக்கு திருமணமாகி ஒரு ஆண்டே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Tags : Samitop, RTO ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன் பறக்க தடை: மாவட்ட எஸ்பி தகவல்