×

திருச்செந்தூர் தொகுதியில் 1லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்

உடன்குடி,மார்ச்16:  திருச்செந்தூர் தொகுதியில் திமுக 1லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தண்டுபத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார். திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் உடன்குடி ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் தண்டுபத்து மாவட்ட தலைமையலுவலகத்தில் நடந்தது. காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாநில மாணவரணி துணை செயலர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மதிமுக மாவட்ட செயலர் புதுக்கோட்டை செல்வம், விசிக மண்டல செயலர் தமிழினியன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாவட்ட செயலர் விடுதலைச்செழியன், மமக மாவட்ட தலைவர் ஆசாத், காங்கிரஸ் மாநிலபொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட பொருளாளர் நடராஜன், வட்டார காங்கிரஸ் தலைவர் துரைராஜ் ஜோசப், சிபிஐ மாவட்ட துணைசெயலர் கரும்பன், தவாக மாவட்ட செயலர் மாரிச்செல்வம், விசிக தொகுதி பொறுப்பாளர் வெற்றிவேந்தன், மாநில மகிளா காங்கிரஸ் இணைசெயலர் அன்புராணி, ஆதிதமிழர் பேரவை மாவட்ட செயலர் காயல் முருகேசன், மதிமுக ஒன்றிய செயலர் இம்மானுவேல், லட்சுமிபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆதிலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளருமான அனிதாராதாகிருஷ்ணன்  பேசியதாவது: 10ஆண்டு கால அதிமுகவின் மக்கள் விரோத அரசை அகற்ற மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். தமிழக மக்கள் விரும்பும் வண்ணம் தொலைநோக்குத் திட்டங்கள், அறிவிப்புகள் தந்த திமுகவின் தேர்தல் அறிக்கையை மக்கள் வரவேற்கின்றனர். இந்து ஆலயங்கள் புனரமைக்க 1000கோடியும், மசூதி தேவாலயங்கள் சீரமைக்க 200கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பின் மூலம் பாஜவின் பொய் பிரசாரத்தை மக்கள் நிராகரிப்பார்கள். திருச்செந்தூர் தொகுதியில் உடன்குடி ஒன்றியத்தில் விவசாயத்தை மேம்படுத்தவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் திமுக ஆட்சி அமைந்தவுடன் புதிய குளங்கள் அமைக்கப்படும். தொகுதி மக்களின் ஆதரவோடு திருச்செந்தூர் தொகுதியில் 1லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

 கூட்டத்தில் உடன்குடி ஒன்றிய செயலாளர் பாலசிங் வரவேற்றார். திமுக மாவட்ட அமைப்பாளர்கள் மகளிரணி ஜெசிபொன்ராணி, நெசவாளர் அணி மகாவிஷ்ணு, இளைஞரணி ராமஜெயம், மீனவரணி ரிதர் ரொட்ரிகோ, வழக்கறிஞர்அணி ஜெபராஜ், துணைஅமைப்பாளர்கள் கலைஇலக்கியஅணி ரஞ்சன், வர்த்தகஅணி ரவிராஜா, இளங்கோ, நெசவாளர்அணி கிருஷ்ணகுமார், மாணவரணி முகைதீன், அமிர்தா மகேந்திரன், சிறுபான்மை நல உரிமைப்பிரிவு சிராஜூதீன், விவசாயஅணி சக்திவேல், மீனவரணி மெராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஜெ.ஜெகன், மாவட்டப்பிரதிநிதிகள் மதன்ராஜ், பிரபாகர், செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சலீம், ஒன்றிய இளைஞணி அமைப்பாளர் பாய்ஸ், நகர இளைஞரணி அமைப்பாளர் அஜய், தலைமை பேச்சாளர் செந்தூர் பாலகிருஷ்ணன், சிபிஎம் ஒன்றிய செயலர் ஆறுமுகம், காங்கிரஸ் நிர்வாகிகள் கன்னிமுத்து, முத்து, பிரபாகர், ஜெயராமன், மதிமுக நிர்வாகிகள் சண்முகவேல், மதியழகன், அந்தோணி, மமக நகர தலைவர் ஷேக், உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர திமுக செயலர் ஜான்பாஸ்கர் நன்றி கூறினார்.

Tags : Thiruchendur ,
× RELATED சாகுபுரம் அருகே வளைவு பாலத்தில் அபாய பள்ளம் தற்காலிகமாக சீரமைப்பு