×

ராமேஸ்வரம் மீனவர்களை மீட்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்ட அறிக்கை: ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 469 விசைப்படகுகளில் மீனவர்கள் 22ம் தேதி கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர்களில் 9 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் 9 மீனவர்களையும் கைது செய்து, அவர்களது உடைமைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

9 மீனவர்களையும் விடுவித்து, அவர்களது உடைமைகளையும் மீட்டு தர வேண்டும் என ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு முதல்வர் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மீனவர்களை விடுதலை செய்ய உதவ வேண்டும்.

Tags : Rameswaram ,Communists ,Chennai ,Indian Communist ,State ,M. Veerapandian ,Katchatheevu ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து