டெல்லி: டெல்லியில் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்த கேள்விக்கு பதில் கூற அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மறுப்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்ட முடிவுகளை வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ரூ.3,030 கோடியில் வேதிப்பொருள் உற்பத்தி தொழில் பூங்காக்கள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டது. பெல்லாரி – குண்டக்கல் இடையே சரக்கு ரயில் போக்குவரத்துக்கு இரு பாதைகள் அமைக்கப்படும் என்றும் வைஷ்ணவ் கூறினார்.
போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் திருட்டு பற்றி நிருபர்கள் கேள்விக்கு அமைச்சர் வைஷ்ணவ் பதில் தரவில்லை. டெல்லியில் இளைஞர்கள், மாணவர்கள் நடத்தும் போராட்டம், கோரிக்கைகள் குறித்தும் பதில் கூற மறுத்துவிட்டார். நிருபர்கள் கேள்விக்கு வினாத்தாள் ஏதும் கசியவில்லை என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் பதில் கூறினார்.
