×

அனுமதி பெற்று நடைபெறும் போராட்டத்துக்கு விழுப்புரம் போலீசார் தடை விதிப்பதா?.. பெ.சண்முகம் கண்டனம்

 

விழுப்புரம்: விழுப்புரம் போலீசார் போராட்டத்தில் பங்கேற்றவர்களை கைது செய்ததாக பெ.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி விழுப்புரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது. விழுப்புரத்தில் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் போராடியவரக்ளை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து பேசிய பெ.சண்முகம்; தமிழ்நாடு முழுவதும் இத்தகைய இரவு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் விழுப்புரம் போலீசார் போராட்டத்தில் பங்கேற்றவர்களை கைது செய்கிறது. ”அமைதி வழியில் தானே மாணவர்கள் போராடினாங்க.. விழுப்புரம் காவல்துறை மட்டும் ஏன் அவர்களை அப்புறப்படுத்துனாங்க.. அவங்க திரும்ப இங்க வரணும்” அனுமதி பெற்று நடைபெறும் போராட்டத்துக்கு விழுப்புரம் போலீசார் தடை விதிப்பதா? விழுப்புரத்தில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

அராஜகமான முறையில் கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை அத்துமீறினால் எங்களின் நடவடிக்கை வேறு மாதிரியாக இருக்கும். தங்களது போராட்டம் இரவு 10 மணி வரை தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

Tags : Viluppuram ,Fr. Shameless ,Shanmugham ,Marxist Party ,Union State ,NEET ,
× RELATED டெல்லியில் இளைஞர்கள் நடத்தி வரும்...