×

காணவில்லை போஸ்டர் எதிரொலி மாணவர் போராட்டத்துக்கு நடிகர் மாதவன் திடீர் ஆதரவு

சென்னை: டெல்லியில் போராடும் இந்திய மாணவர்களுக்கு ஆதரவாக இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக பதவி வகிக்கும் நடிகர் மாதவன், எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில், புனே திரைப்பட கல்லூரியிலுள்ள மாதவனின் அலுவலக வாசலில், ‘காணவில்லை’, ‘நீட் விற்பனை’ போன்ற வாசகங்கள் எழுதிய போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இதன் எதிரொலியாக, மாணவர் போராட்டத்துக்கு ஆதரவாக மாதவன் தனது சோஷியல் மீடியாவில் கூறியிருப்பதாவது:

கல்வி முறை நம்பிக்கை, நேர்மை மற்றும் வாய்ப்பை வழங்குவதாக இருக்க வேண்டும். தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்கள் அந்த நம்பிக்கையை சிதைக்கின்றன. இந்த சம்பவத்துக்கு காரணமான ஒவ்வொரு தனி நபரும் விரைவாகவும், உறுதியாகவும் நீதிக்கு முன்பு நிறுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். தற்காலிக பின்னடைவுகள் மாணவர்களாகிய உங்கள் எதிர்காலத்தை வரையறுக்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.

Tags : Madhavan ,Chennai ,Film and Television Institute of India ,Delhi ,Pune Film College… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து