×

காங்கிரஸ் தலைவர் பவன் கேரா காவல் நிலையத்தில் ஆஜர்

கவுஹாத்தி: அசாமில் அண்மையில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலுக்கு முன், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி குறித்து காங்கிரஸ் தலைவர் பவன் கேரா சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார்.  அதாவது, “ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயானுக்கு வௌிநாடுகளில் சொத்துகள் உள்ளதாகவும், பல வௌிநாட்டு பாஸ்போர்ட்கள் இருப்பதாகவும் கேரா தெரிவித்திருந்தார்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் பவன் கேராவுக்கு எதிராக கவுஹாத்தி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணைக்கு பவன் கேரா நேற்று அசாம் காவல் துறையின் குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.

Tags : Congress ,Pawan Khera ,Guwahati ,Assam ,Chief Minister ,Himanta Biswa Sarma ,Riniki Bhuyan… ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...