×

ராமேஸ்வரத்துக்கு செப்டம்பரில் வந்தே பாரத்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நேற்று ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு வரும் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைப்பார். சென்னை – ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரயில் சேவை செப்டம்பர் மாதம் துவங்க உள்ளது.

அனைத்து வசதிகளுடன் ரயில் நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்த பிறகு வெளிமாநிலங்களுக்கு புதிய கூடுதல் ரயில் இயக்கப்படும். புதிய ரயில்கள் அதிகரித்த பிறகு பாம்பன் ரயில் பாலத்தில் மற்றொரு ரயில் வழித்தடம் அமைக்கப்படும். பழைய ரயில் பாலம் முழுமையாக அகற்றப்படும். பழைய பாலத்தை நினைவுகூறும் வகையில் சிறிய வடிவில் மாடல் பாலம் செய்து ரயில் பயணிகள் காட்சிக்கு வைக்கப்படும்’’ என்றார்.

Tags : Vande Bharat ,Rameswaram ,Southern Railway ,General Manager ,R.N. Singh ,Rameswaram railway station ,Modi ,Bharat ,Chennai ,Rameswaram… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து