×

பூந்தமல்லி தொகுதி திமுக, கூட்டணி கட்சி செயல் வீரர்கள் கூட்டம்: இன்று நடக்கிறது

திருவள்ளூர், மார்ச் 16: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆவடி சா.மு.நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமியை ஆதரித்து இன்று (16ம் தேதி) காலை 9 மணியளவில் எனது தலைமையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலையில் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் பூந்தமல்லியில் உள்ள தனியார் திருமண்டபத்தில் நடைபெறவுள்ளது. எனவே இந்த கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மூத்த முன்னோடிகள், உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Poonamallee ,DMK ,Coalition ,
× RELATED இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும்...