- த்வேகா வடக்கு சென்னை வடக்கு மாவட்டம்
- சிவா
- வீடுகள்
- குழு
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- பெரம்பூர் வி. சிவா
- தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்
- கிர்லோஷ்குமார்
- தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்...
சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக தவெக வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளரான பெரம்பூர் வி.சிவாவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக செயலாளர் கிர்லோஷ் குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது : தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் முன்னாள் தலைவர் பூச்சி எஸ்.முருகனின் ராஜினாமா கடந்த மே 5ம் தேதி ஏற்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காலியாக இருந்த தலைவர் பதவிக்கு தவெக வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பெரம்பூர் வி.சிவா நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் தொடர்பான பதவிக்காலம், ஊதியம் மற்றும் பிற விதிமுறைகள் குறித்து தனியாக அரசாணை வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
