×

ஹஜ் பயணம் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சென்னை: இந்திய ஹஜ் குழு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 24.7.2026, இரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது என மும்பை இந்திய ஹஜ் குழு அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்தவுடன் 30.7.2026 காலை 11 மணிக்கு கணினி வழி குலுக்கல் தேர்வு நடைபெறும்.

இத்தேர்வு முறை https://www.hajcommittee.gov.in என்ற இணையதளத்தில் நேரலை செய்யப்படும். இதன்மூலம் தற்காலிகமாக தேர்வு பெற்றவர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களின் பட்டியல் இந்திய ஹஜ் குழுவின் இணையதளத்தில் வெளியிடப்படுவதுடன், குறுஞ்செய்தி மூலமாகவும் தெரிவிக்கப்படும். தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட புனித பயணிகள் ஒவ்வொருவரும் முதல் தவணையாக ரூ.1,52,300-ஐ 10.8.2026க்குள் செலுத்த வேண்டும்.

Tags : Hajj ,Chennai ,Haj Committee of India ,Tamil Nadu State Hajj Committee ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து