×

4 இந்திய மாலுமிகள் பலி ரஷ்ய அதிகாரிகளிடம் இந்தியா கண்டனம்

புதுடெல்லி: உக்ரைன் கடற்கரையின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து எம்பி கோல்டன் லியோ என்ற வணிகக் கப்பல் புறப்படத் தயாராக இருந்தது. இந்நிலையில் இந்த கப்பல் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. கப்பல் மீது ரஷ்ய குரூஸ் ஏவுகணைகள் தாக்கியதாக உக்ரைன் விமானப்படைத் தெரிவித்துள்ளது. இந்த கப்பலில் ஐந்து இந்தியர்கள் உட்பட மொத்தம் 17 பணியாளர்கள் இருந்தனர்.

இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த பணியாளர்கள் பலியாகி உள்ளனர். ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமிகள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உக்ரைனில் உ்ள இந்திய தூதரகம் நிலைமைய உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் ரஷ்யாவின் பொறுப்பு அதிகாரிகளை அழைத்த வெளியுறவுத்துறை அமைச்சகம், இதுபோன்ற தாக்குதல்கள் சர்வதேச கடல்சார் வர்த்தகத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. வணிகக் கப்பல் போக்குவரத்தை இலக்காக கொண்டு அதனால் ஏற்படும் அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்புகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் தவிர்க்கப்பட வேண்டும். இந்தியாவின் வலுவான கவலையை தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags : India ,New Delhi ,Odessa ,Russia ,Ukrainian Air Force ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...