×

ஆண்ட்ராய்டு மொபைல்களில் குறுஞ்செய்தி மூலமாக ஊடுருவி வங்கிக் கணக்கில் இருந்து பணம் பறிக்கும் டிரினிக் மால்வேர்!!

டெல்லி ஆண்ட்ராய்டு மொபைல்களை குறிவைத்து ஊடுருவும் டிரினிக் ஹேக்கரால் வங்கி கணக்கில் இருந்து பணத்திற்கு பேராபத்து இருப்பதாக ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரின் 95.23% ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்துகின்றனர். இந்த ஆண்ட்ராய்டு  போன்களை குறிவைத்து ட்ரினிக் என்ற ஹேக்கர் ஊடுருவி வருவதாக ஒன்றிய அரசின் கணினி சார்ந்த நெருக்கடி தொடர்பான மேலாண்மை குழு எச்சரித்துள்ளது. இந்த ஹேக்கரானது வருமான வரித் துறை போல குறுஞ்செய்தி ஒன்றை அனுப்புகிறது. அதில் உள்ள ஒரு லிங்கை கிளிக் செய்தால் மொபைலை கண்காணிக்க தொடங்கி வங்கி விவரங்களை சேமிக்கிறது. அதன் மூலமாக மொபைல் போன் பயன்படுத்துவோரின் வங்கிக்கணக்கில் பணத்தை சுருட்டிக் கொள்கிறது. 27க்கும் அதிகமான பொதுத் துறை வங்கி பயனாளிகளை குறிவைத்து இந்த சைபர் மோசடி அரங்கேற்றப்படுவதாக ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. அது போன்ற குறுஞ்செய்திகளில் வரும் லிங்கை திறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது….

The post ஆண்ட்ராய்டு மொபைல்களில் குறுஞ்செய்தி மூலமாக ஊடுருவி வங்கிக் கணக்கில் இருந்து பணம் பறிக்கும் டிரினிக் மால்வேர்!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Union government ,Dinakaran ,
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...