×

கூவமூலை பகுதியில் நீரோடை விரிவாக்கத்தால் விவசாய நிலம் பாதிப்பு

பந்தலூர், மார்ச் 15:  பந்தலூர் அருகே கூவமூலை பகுதியில் வேளாண் பொறியியல் துறை சார்பில் நீரோடை தூர்வாரி தடுப்பணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நீரோடை தூர்வாரும் போது அருகே உள்ள விவசாய நிலங்களில் உள்ள தேயிலை உள்ளிட்ட பயிர்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி நீரோடையை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட விவசாயிகள் வீட்டில் இல்லாத நேரத்தில் இப்பணிகள் நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகின்றனர். நீரோடை தூர்வாரும் பணிகளை விவசாயிகள் பாதிக்காமல் பணிகள் மேற்கொள்ளவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Koovamoolai ,
× RELATED கூவமூலை செட்டிவயல் பகுதியில் கனமழைக்கு தரைப்பாலம் உடைப்பு